முதல் முறையாக நாமினேஷனுக்கு வரும் லாஸ்லியா; கோவத்தில் கட்டிலை உடைத்த முகைன் - பிக்பாஸ் ப்ரோமோஸ்!

சினிமா
Updated Aug 05, 2019 | 17:39 IST | Zoom

இன்றைய ப்ரோமோவில் முகைனுக்கும் அபிராமிக்கும் சண்டை வந்து, முகைன் கோவத்தில் கட்டிலை உடைப்பதும் காட்டப்படுள்ளது. 

Biggboss Tamil promos
Biggboss Tamil promos  |  Photo Credit: YouTube

42வது நாளைக் கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 3. இத்தனை வாரமாக நாமினேஷனுக்கு வராத லாஸ்லியா சென்ற வாரம் நடைபெற்ற சம்பவத்தால் முதன்முறையாக நாமினேஷனுக்கு வருகிறார் என்பது இன்று வெளியான ப்ரோமோக்களைப் பார்த்தால் தெரிகிறது. மற்றொரு ப்ரோமோவில் முகைனுக்கும் அபிராமிக்கும் சண்டை வந்து, முகைன் கோவத்தில் கட்டிலை உடைப்பதும் காட்டப்படுள்ளது. 

முதல் ப்ரோமோவில் சாக்‌ஷி தான் முகைனுடன் பேசுவது அபிராமுக்குப் பிடிக்கவில்லையா என்று கேட்க அதற்கு அபிராமி எப்போதும் உனக்கு உன் விஷயம்தான் முக்கியம் என்று கோவமாகக் கூறிவிட்டு எழுந்து செல்கிறார். அதன்பின் லாஸ்லியாவிடம் சாக்‌ஷியைப் பற்றி குறை கூறிவிட்டு நான் எழுந்து வந்ததற்கு முகைன் ஒன்றுமே கூறவில்லை என்னுடம் வரவும் இல்லை என்று அழுகிறார். கடந்த சில வாரங்களாகவே அபிராமி நாமினேஷனில் இருக்கிறா. இதனால் சென்ற வாரமே, ‘’ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க விடமாட்டார்களா’’ என்று அழுதார். காரணமே இல்லாமல் வாரம் முழுக்கவும் அழுதார். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் இவர் நாமினேஷனில் வராமல் இருக்கதான் இப்போதே அழத் தொடங்கிவிட்டார் என்று அபிராமியை திட்டத் துவங்கிவிட்டனர். 

 

 

அடுத்த ப்ரோமோவில் மீண்டும் முகைன், அபிராமி சண்டைதான் காட்டியிருந்தார்கள். இதில் முகைனும் அபிராமியும் பேசும்போது முகைன் கோபப்பட்டு கட்டிலை உடைக்கிறார். கட்டில் அவ்வளவு பலவீனமா இல்லை முகைன் அவ்வளவு ஸ்ட்ராங்கா என்று தெரியவில்லை. நியாயமாகப் பார்த்தால் பிக்பாஸ் வீட்டின் பொருளை சேதப்படுத்தியதற்காக ரெட் கார்ட் தான் தரவேண்டும்.

 

 


மூன்றாவது ப்ரோமோவில் சாக்‌ஷி, சரவணன், செரின் அனைவரும் லாஸ்லியாவை நாமினேட் செய்கிறார்கள். இத்தனை நாட்களாக  ஆட்டிடியூட் காட்டுகிறார் என்பதைத் தவிற லாஸ்லியா பெரியாத தவறு செய்யவில்லை. மேலும் இவரை விட நாமினேட் செய்ய மற்றவர்கள் அதிகமாகத் தவறு செய்திருந்தார்கள். சென்ற வாரம் மொட்ட கடுதாசி டாஸ்கில் நிறைய சண்டைகள் நடந்தன. அதில் லாஸ்லியா அனைவரையும் அழைத்து யாரும் என்னிடம் பேசாதீர்கள் என்று கூறியது அனைவருக்கும் மிகுந்த கோபத்தை வரவழைத்தது. மேலும் கவினுடன் அவர் நெருங்கிப் பழகுவதும் மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. இதனால் பெரும்பாலானோர் லாஸ்லியாவை நாமினேட் செய்திருக்கலாம்.
 

 

 

ஆகமொத்தம் இன்று பெரிய சண்டை இருக்கு!  

NEXT STORY
முதல் முறையாக நாமினேஷனுக்கு வரும் லாஸ்லியா; கோவத்தில் கட்டிலை உடைத்த முகைன் - பிக்பாஸ் ப்ரோமோஸ்! Description: இன்றைய ப்ரோமோவில் முகைனுக்கும் அபிராமிக்கும் சண்டை வந்து, முகைன் கோவத்தில் கட்டிலை உடைப்பதும் காட்டப்படுள்ளது. 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...