ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை.. போராடி ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன்

சினிமா
Updated Apr 18, 2019 | 17:24 IST | Zoom

பல்வேறு குழப்பங்களுக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Actor Robo shankar and Actor Sivakarthikeyan, நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் 

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரோபோ சங்கர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. ஏதோ குழப்பத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கினை பதிவு செய்ததாக ட்வீட் செய்துள்ளார். 

தமிழகத்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலோடு 18 சட்டமன்றத் தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளதால் காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வயதான முதியவர்களும் வாக்குச் சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் குடும்பத்தினருடன் வாக்களித்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய் உள்ளிட்டோர் காலையிலேயே வாக்காளர்களோடு வரிசையில் நின்று வாக்களித்தனர். 

 

 

நடிகை த்ரிஷா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார். 

 

 

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ்குமார் தனது மனைவி சைந்தவியுடன் தி.நகர் சாரதா வித்யாலயா பள்ளியில் வாக்களித்தார். 

 

 

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் நடிகர் ஆதி தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். 

 

 

சென்னை சாலிகிராமம் கரியப்பா பள்ளியில் வாக்களிக்க வந்த போது நடிகர் ரமேஷ் கண்ணா பெயர் வாக்களர் பட்டியலில் இல்லை என்று கூறியதால் திரும்பி சென்றார். இது தொடர்பாக நடிகர் ரமேஷ் கண்ணா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதனிடையே காலையில் நடிகர் ரோபோ சங்கர் சாலிகிராமம் காவேரி பள்ளிக்கு வாக்களிக்க வந்த போது, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை. இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை வளசரவாக்கம் குட்ஷெப்பர் பள்ளிக்கு வாக்களிக்க வந்தார். ஆனால், அங்குள்ள பூத்தில் அவரது மனைவி பெயர் மட்டும் இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

 

 

பின்னர், சிவகார்த்திகேயனிடம் கைரேகை மற்றும் கையெழுத்து வாங்கிக் கொண்ட அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். நீக்கப்பட்ட பெயர் பட்டியலில் சிவகார்த்திகேயனின் பெயர் இருந்ததால் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். வாக்களித்த பின்னர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், "வாக்களிப்பது உங்கள் உரிமை, உங்கள் உரிமைக்காக போராடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். 

NEXT STORY
ரோபோ சங்கருக்கு ஓட்டு இல்லை.. போராடி ஓட்டு போட்ட சிவகார்த்திகேயன் Description: பல்வேறு குழப்பங்களுக்கு பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
Loading...
Loading...
Loading...