இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா ? என்னென்ன படங்கள் தெரியுமா ?

சினிமா
Updated Jul 10, 2019 | 12:27 IST | Zoom

இந்த வாரம் தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு.

Movies Releasing this week
இந்த வாரம் ரிலீஸாகம் படங்கள்  |  Photo Credit: Twitter

கொரில்லா, கூர்கா, வெண்ணிலா கபடி குழு 2, தோழர் வெங்கடேசன், போதை ஏறி புத்தி மாறி ஆகிய படங்கள் இந்த வாரம் தமிழில் வெளியாகவுள்ளது. இது மட்டும் அல்லாது ஹிந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள 'சூப்பர் 30' மற்றும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக அறிமுகமாகும் 'டொரசனி' படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது 

கூர்கா:

வாராவாரம் வெள்ளிக்கிழமை வருவது போல் யோகிபாபு நடித்த படமும் வருவது இயல்பு. அந்த வகையில் இந்த வாரம் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 'கூர்கா' படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. காமெடி திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் சார்லி, ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

 

 

கொரில்லா:

ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள 'கொரில்லா' படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் சதிஷ், யோகிபாபு, ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு சிம்பான்சியம் நடித்துள்ளது. நீண்டநாட்களாக ரிலீஸுக்கு காத்திருந்த இப்படம் இந்த வாரம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகுகிறது. 

 

   

 

வெண்ணிலா கபடி குழு 2:

2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் சீக்வல் 'வெண்ணிலா கபடி குழு-2' . செல்வசேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ராந்த், 'ஆடுகளம்' கிஷோர், பசுபதி, ஆர்த்தன பினு, அப்புக்குட்டி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய சுசீந்திரன் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். ஸ்போர்ட்ஸ் ட்ராமாவான இப்படம் இந்த வாரம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகுகிறது.   

 

 

போதை ஏறி புத்தி மாறி:

புதுமுக இயக்குனர் சந்துரு இயக்கத்தில் தீரஜ், ராதாரவி, பிரதாய்னி  சுர்வா ஆகியோர் நடித்துள்ள படம் 'போதை ஏறி புத்தி மாறி'. திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

  
 

 

தோழர் வெங்கடேசன்:

இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மஹாசிவன் இயக்கியுள்ள படம் 'தோழர் வெங்கடேசன்'. புதுமுகங்கள் ஹரிஷங்கர் மற்றும் மோனிகா சின்னகோட்லா இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம்  ஜூலை 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

 

ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் வெளியாவதால் திரையரங்குகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிவித்தபடி அத்தனை படங்களும் இந்த வாரம் வெளியாகுமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   

NEXT STORY
இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா ? என்னென்ன படங்கள் தெரியுமா ? Description: இந்த வாரம் தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் தொகுப்பு.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola