இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
90 வயதான லதா மங்கேஸ்கர் சுவாசக் கோளாரு பிரச்னையால் அவதிப் பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது மும்பையில் வசித்து வரும் லதா மங்கேஸ்கர் அங்குள்ள பிரிச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதால், ஐசியூவில் வைத்து சிகிச்சை நடைபெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தனது 90 வயதைக் கடந்த லதா மங்கேஸ்கர் ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், மராத்தி, பெங்காலி மொழி உட்பட உலகம் முழுவதும் 36 மொழிகளில் பாடியுள்ளார். இந்தியில் மட்டுமே பல ஆயிரக்கணக்கான பாடல்கல் பாடியுள்ளார். இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவைதவிர பத்ம விபூஷன், ததாசாஹேப் பால்கே விருது, தேசிய விருதுகள், ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார். 25,000 பாடல்களுக்கும் மேல் பாடியதற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.