மும்பையில் கீர்த்தி சுரேஷும் ஜான்வி கபூரும் மீட்டப்! - படங்கள்

சினிமா
Updated Apr 20, 2019 | 15:36 IST | Instagram

கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் மற்றும் போனி கபூர் உடன் இருக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

keerthy suresh, boney kapoor, jhanvi kapoor
கீர்த்தி சுரேஷ், போனி கபூர், ஜான்வி கபூர்  |  Photo Credit: Instagram

நடிகை கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதேவியின் கணவர் மற்றும் மகளுடன் மும்பையில் எடுத்துக்கொண்ட படங்கள் வைரல் ஆகி வருகிறது. நடிகை மேனகா சுரேஷின் மகள் கீர்த்தி சுரேஷ் மலையாள படங்கள் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். பின்பு இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்  பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.  ரஜினிமுருகன், பைரவா உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் நடிகை சாவித்திரியின் சுயசரிதை படமான மகாநடியின் மூலம் நடிப்பின் உச்சத்துக்கு சென்றார். அந்த படம் பல விருதுகளை வாரிக் குவித்தது. சாவித்திரியை அப்படியே உரித்து வைத்திருக்கிறார் என்று அவருக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்தன. கடைசியாக விஜய்யுடன் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார். 

இதனை அடுத்து அவர் போனி கபூர் தயாரிப்பில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. இதனை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் உறுதி செய்திருந்தார். கடந்த மார்ச் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பார்த்து பிரமித்துப் போய் இருந்தேன். அவர் எனது அப்பாவின் படத்தில் நடிக்க இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று வாழ்த்துக்களைத் தெரிவித்து இருந்தார். 

keerthy suresh jhanvi kapoor

தமிழில் போனிகபூர் அஜித்தை வைத்து பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து வருகிறார்.  இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ஸ்போர்ட்ஸ் மூவி ஒன்றை தயாரிக்க இருக்கிறார், இதனை அமித் ஷர்மா இயக்குகிறா.ர் இந்த திரைப்படத்துக்கு தான் ஜான்வி கபூர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். 

 

இந்நிலையில்  கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் மற்றும் போனி கபூர் உடன் இருக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படம் மும்பையில் ஒரு ஹோட்டல் வாசலில் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பேச்சுவார்த்தைக்காக கீர்த்தி சுரேஷ் மும்பைக்கு சென்றிருந்த நிலையில் அவர்களுடன் பார்ட்டியில் இருந்து விட்டு கிளம்பும் போது எடுத்த படங்கள் இவை என்று தெரிகிறது. விரைவில் இந்த படத்துக்கான ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். இந்தப்படம் தவிர கீர்த்தி சுரேஷ் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

NEXT STORY
மும்பையில் கீர்த்தி சுரேஷும் ஜான்வி கபூரும் மீட்டப்! - படங்கள் Description: கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் மற்றும் போனி கபூர் உடன் இருக்கும் படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Loading...
Loading...
Loading...