அனுஷ்கா, சிம்புவை அடுத்து ஸ்லிம்மான கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் படம்

சினிமா
Updated Jun 01, 2019 | 18:00 IST | Zoom

எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாகியுள்ளார்.

Keerthy Suresh
கீர்த்தி சுரேஷ்  |  Photo Credit: Instagram

மகாநடி படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திருப்பியவர் கீர்த்தி சுரேஷ். சென்ற வருடம் சாமி ஸ்கொயர், சண்டகோழி 2, விஜய்யுடன் சர்கார் நடித்திருந்தார். மகாநடியில் சாவித்திரி ஆகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தெலுங்கிலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தைத் தந்து இருக்கிறது. தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் மரக்கார் என்ற படத்திலும் நடித்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் இருந்து வாய்ப்பு வந்தது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் அஜய் தேவ்கனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதற்காக மும்பையில் போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரையும் சந்தித்து வந்திருந்தார் கீர்த்தி சுரேஷ். எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாகியுள்ளார். ஏற்கனவே அவர் ஒல்லிதான் ஆனால் இப்பொழுது நரம்பாக இளைத்திருக்கிறார். இது மலையாளப் படத்துக்காகவா அல்லது இந்தியில் நடிக்கவிருக்கும் படத்துக்கா என்று இன்னும் உறுதியானத் தகவல் தெரியவில்லை.

ஆனால் மிகவும் ஸ்லிம்மாக மாறித் தன் உடலை பாதியாக உருக்கியிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. பாகுபலிக்குப் பிறகு உடல் எடை கூடி இருந்த அனுஷ்காவும் தற்போது உடல் இளைத்தது மட்டுமல்லாமல் உடல் குறைப்புக்கான புத்தகத்தையும் வெளியிட இருக்கிறார். அதேபோல சிம்புவும் லண்டனுக்கு சென்று சிகிச்சைகள் மேற்கொண்டு தனது உடலை பாதியாகக் குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY