பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சினிமா
Updated Aug 19, 2019 | 14:18 IST | Zoom

அஜய் தேவ்கன் நடிக்கும் 'மைதான்' படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

Keerthy Suresh debuts in Bollywood with 'Maidaan','மைதான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்
'மைதான்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை கீர்த்தி சுரேஷ்  |  Photo Credit: Twitter

நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கும் 'மைதான்' திரைப்படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். 

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 66-வது தேசிய விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை 'மகாநடி' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்தபடியாக கீர்த்தி சுரேஷ் 'மைதான்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை தேசிய விருது பெற்ற 'பதாய் ஹோ' படத்தை இயக்கிய அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்குகிறார்.  ஸீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதனை குறிக்கும் வகையில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.     

 

 

அஜய் தேவ்கன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகவுள்ளது. 1950-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் கால்பந்து பயிற்சியாளராக பணிபுரிந்த சயீத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவு இப்படம் உருவாகுகிறது. இவரது காலமே இந்திய கால்பந்து வரலாற்றில் மிக பொன்னான நேரமாக கருதப்படுகிறது. இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். அதிக பொருட்ச்செலவில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

'மைதான்' படத்தை தவிர்த்து நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் மோகன் லால் நடிக்கும் 'மரக்கார்' படத்திலும், தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் திரில்லர் படத்திலும் நடித்து வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் கதாபத்திரத்தில் மிக சிறப்பாக நடித்ததற்கு தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷுக்கு பல வாய்ப்புகள் தற்போது தேடி வருகிறது. மேலும் அவரது அடுத்த படங்களை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...