ஒரே நேரத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படங்களை தயாரிக்கும் கார்த்திக் சுப்புராஜ்!

சினிமா
Updated Sep 16, 2019 | 15:08 IST | Zoom

நடிகைகளை முதன்மைக் கதாப்பாத்திரமாக வைத்து, இரண்டு புதிய படங்களை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்

கீர்த்தி சுரேஷ் - கார்த்திக் சுப்புராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ்
keerthy Suresh - Karthik Subbaraj - Aishwarya Rajesh  |  Photo Credit: Twitter

பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது புதிய படத்தை இயக்கி வருகிறார். பெயரிடப்படாத இந்தப்படம் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனது தயாரிப்பில் நடிகைகளை முதன்மைக் கதாப்பாத்திரமாக வைத்து, இரண்டு புதிய படங்களை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

இதற்கு முன் மேயாத மான், மெர்குரி ஆகிய படங்களை அவர் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குநர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மை நாயகியாக நடிக்கும் படத்தை சென்ற வாரம் தொடங்கிய நிலையில் இன்று ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை நாயகியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

இந்தப் படத்தை ரதீந்தின் ஆர் பிரசாத் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் என்று கூறப்பட்ட நிலையில் இந்தப்படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷின் படம் கோடைக்கானலிலும் ஐஸ்வர்யா ராஜேஷின் படம் ஊட்டியிலும் படபிடிப்பு துவங்கப்பட்டுள்ளது. 

 

Image

Image

 

NEXT STORY