மிரட்டலாக வெளியானது கார்த்தியின் 'கைதி' டிரெய்லர்!

சினிமா
Updated Oct 07, 2019 | 21:48 IST | Zoom

நடிகர் கார்த்தியின் கைதி படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

kaithi official trailer released
நடிகர் கார்த்தி  |  Photo Credit: Twitter

கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் கைதி. இப்படத்தில் நரேன், யோகிபாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் இந்தப் படத்தில் ஹீரோயின் இல்லை. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளாா். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளாா். 

கைதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலானதைத் தொடர்ந்து, படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் விஜய்யின் பிகில், விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...