'காப்பான்' தெலுங்கு வெர்ஷன்...பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் ராஜமௌலி!

சினிமா
Updated Jun 28, 2019 | 17:04 IST | Zoom

சூர்யா நடிக்கும் 'காப்பான்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'பந்தோபஸ்த்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Bandobast
பந்தோபஸ்த்  |  Photo Credit: Twitter

சென்னை: கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'காப்பான்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'பந்தோபஸ்த்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிவுள்ளது. 

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யா, மோகன் லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் பர்ஸ்ட் லுக்கை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இன்று வெளியிட்டார்.  

 

 

பின்னர் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்தார். 

 

 

ஜூன் 27-ஆம் தேதி 'காப்பான்' படத்தின் தெலுங்கு பதிப்பின் தலைப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகை விஜய நிர்மலா காலமானதால் அப்படத்தின் தலைப்பு இன்று வெளியானது.

 

 

தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் உள்ளவர்  நடிகர் சூர்யா. இவரின் 'சிங்கம்', 'சிங்கம்-2' படங்கள் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனாலேயே அவரின் படங்கள் தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வருகிறது. 

Bandobast

'காப்பான்' திரைப்படத்தின் டீசர், ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி  ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மோகன் லால் இந்திய நாட்டின் பிரதமராகவும், சூர்யா அவரது பாதுகாப்பு அதிகாரியாகவும் நடித்துள்ளார் என்று தகவல் வெளியானது. இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என்று டீசரில் அறிவிக்கப்பட்டது.  

 

 'என்.ஜி.கே' படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா 'இறுதிச்சுற்று' படத்தை இயக்கிய சுதா கொங்ரா இயக்கத்தில் 'சூரரை போற்று' என்கிற படத்தில் நடித்துவருகிறார். 

ஏர் டெக்கான் ஜி.ஆர். கோபிநாத் வாழ்க்கையை தழுவி உருவாகும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.   

 

 

NEXT STORY