வெளியானது அயோக்யா பட கண்ணே கண்ணே பாடல் வீடியோ!

சினிமா
Updated May 06, 2019 | 12:02 IST | Zoom

அயோக்யா திரைப்படம் விஷால், கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ராஷி கண்ணா நடிப்பில் மே 10-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதன் சிங்கிள் சென்ற வாரம் ரிலீஸான நிலையில் தற்போது கண்ணே கண்ணே பாடல் வீடியோ ரிலீஸாகியுள்ளது.

KanneKanneVideoSong
கண்ணே கண்ணே பாடல் வீடியோ  |  Photo Credit: YouTube

தெலுங்கில் 2015-ஆம் ஆண்டு வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்தான் இந்த அயோக்யா. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர், பிரகாஷ் ராஜ், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். தெலுங்கில் மட்டுமல்ல ஹிந்தியில் சிம்பா என்ற பெயரில் ரன்வீன் சிங் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. அந்தப்படம் தான் தற்போது விஷால், கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ராஷி கண்ணா நடிப்பில் அயோக்யாவாக வரும் வெள்ளிக்கிழமை, மே 10-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

விஷாலின் திருமண அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் முதல் படம் அயோக்யா. சென்ற மாதம் இதன் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்றது. இந்தத் தமிழ் ரீமேக்கை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக இருந்த வெங்கட் மோகன் இயக்கியிருக்கிறார்.

 

இந்தப்படத்துக்கு விக்ரம் வேதா இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இதன் முதல் சிங்கிள் சென்ற வாரம் ரிலீஸாகி இருகந்தது.. இந்தப் பாடலை மெர்சல், பேட்ட படப் பாடல்களுக்குக்கு எழுதிய விவேக் எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை ராக் ஸ்டார் அனிருத் பாடியிருக்கிறார். தெலுங்கு, இந்தி இரு மொழியிலும் மெகா ஹிட் ஆனத் திரைப்படம் என்பதால் அயோக்யாவுக்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. தமிழி எந்த அளவுக்கு ஹிட் அடிக்கும் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

NEXT STORY
வெளியானது அயோக்யா பட கண்ணே கண்ணே பாடல் வீடியோ! Description: அயோக்யா திரைப்படம் விஷால், கே.எஸ்.ரவிக்குமார், பார்த்திபன், ராஷி கண்ணா நடிப்பில் மே 10-ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதன் சிங்கிள் சென்ற வாரம் ரிலீஸான நிலையில் தற்போது கண்ணே கண்ணே பாடல் வீடியோ ரிலீஸாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles