ஆல் சென்டர் ஹவுஸ்ஃபுல்! பெண்கள், குழந்தைகளால் நிரம்பி வழியும் காஞ்சனா-3!

சினிமா
Updated Apr 19, 2019 | 12:18 IST | Zoom

சென்ற பாகமான காஞ்சனா-2 வுக்கு இடம் கிடைக்காமல் தியேட்டரில் நின்றுகொண்டு படம் பார்த்தவர்கள் ஏராளம்!

காஞ்சனா 3
காஞ்சனா 3  |  Photo Credit: Twitter

முனி திரைப்படத்தின் நான்காவது பாகமான கஞ்சனா-3 இன்று உலகமெங்கும் தமிழிலும் தெலுங்கிலும் வெளியானது. ராகவா லாரன்ஸ் இயக்கி, கதை எழுதிய, நடித்த இந்த சீரிஸ் தமிழ் சினிமாவில் பேய் ட்ரெண்டிங்கைத் தொடங்கியது எனலாம். இந்தப்படத்தின் மெகா ஹிட்டை அடுத்துதான் இன்று வரை வரிசைகட்டி பேய் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன.  2007- இல் தொடங்கி இன்று வரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் காஞ்சனா என்ற பெயரில் வெளியானது. அதனால் இன்று வெளியான முனி-4 படம் காஞ்சனா-3 என்ற பெயரிலேயே வெளியானது.

முந்தைய பாகங்கள் அனைத்தும் குழந்தைகளைக் குறிவைத்து விடுமுறை தினங்களிலேயே வெளியானது குறிப்பிடத்தக்கது. அதுவும் சென்ற பாகமான காஞ்சனா-2 வுக்கு இடம் கிடைக்காமல் தியேட்டரில் நின்றுகொண்டு படம் பார்த்தவர்கள் ஏராளம். சரி இன்று வெளியான காஞ்சனா-3 படம் எப்படி இருக்கிறது, படம் பார்த்த விமர்சகர்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் பதிவிட்டிருக்கும் கருத்துக்கள் இங்கே...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கிய இந்தப்படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி தம்பொலி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் வழக்கம்போல கோவை சரளாவும் நடித்துள்ளார். இந்த அனைத்து பாகங்களுலும் கோவை சரளா-லாரன்ஸ் காமெடி பயங்கர ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் அவர்களுடன் நகைச்சுவை நடிகர் சூரியும் இணைந்துள்ளார். 

NEXT STORY
ஆல் சென்டர் ஹவுஸ்ஃபுல்! பெண்கள், குழந்தைகளால் நிரம்பி வழியும் காஞ்சனா-3! Description: சென்ற பாகமான காஞ்சனா-2 வுக்கு இடம் கிடைக்காமல் தியேட்டரில் நின்றுகொண்டு படம் பார்த்தவர்கள் ஏராளம்!
Loading...
Loading...
Loading...