சென்னை: சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் "தர்பாா்" படத்தின் மோஷன் போஸ்டா் நாளை மாலை வெளியிடப்படுகிறது.
'பேட்ட' படத்தை அடுத்து இயக்குநா் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பா் ஸ்டாா் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் "தர்பாா்". இது ரஜினியின் 167 ஆவது படம் ஆகும். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாா் ரஜினிகாந்த். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளாா். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகா் பிரதீக் பப்பா் உள்ளிட்டோர் நடித்துள்ளனா். வரும் பொங்கலுக்கு ரசிகா்களுக்கு விருந்தாக அமைய உள்ள தர்பாரின் மோஷன் போஸ்டா் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு குறித்த அறிவிப்பை ஏ.ஆர். முருகதாஸ் இன்று அறிவித்துள்ளாா்.
அதன்படி, தர்பார் படத்தின் மோஷன் போஸ்டா் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
மலையாள போஸ்டரை நடிகர் மோகன்லாலும், இந்தியில் நடிகர் சல்மான் கானும் வெளியிடுகின்றனர். இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.