மத்திய பிரதேசத்தில் நடைபெறும் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு

சினிமா
Updated Nov 01, 2019 | 17:52 IST | Zoom

போபால் நகரில் பிரம்மாண்ட சண்டைக்காட்சி படமாக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது குவாலியரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

Kamal Haasan in Indian 2, கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2
கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2'  |  Photo Credit: Twitter

குவாலியர்: ’இந்தியன் 2’ படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் அடுத்தக்கட்ட படப்படிப்பை தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம் இத்தகவலை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்று ரூ.40 கோடி பொருட்செலவில் சுமார் 2,000 துணை நடிகர்களை கொண்டு போபால் நகரில் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது குவாலியரில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

1992-ஆம் ஆண்டு வெளியான ’இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர். இந்தியன் 2 படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகர் அனில் கபூர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தாண்டுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும், ஜனவரி 2020 முதல் ’தலைவன் இருக்கின்றான்’ படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியன் 2 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது நினைவுகூரத்தக்கது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

NEXT STORY