ரஜினி, சங்கர், மோகன்லால் பங்குபெற்ற காப்பான் இசை வெளியீட்டு விழா! - ஹைலைட்ஸ்

சினிமா
Updated Jul 21, 2019 | 22:45 IST | Zoom

காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்ட அரங்கில் நடைபெற்றுவருகிறது.

காப்பான் இசை வெளியீட்டு விழா
காப்பான் இசை வெளியீட்டு விழா  |  Photo Credit: Twitter

'அயன்', 'மாற்றான்' படங்களை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் நடிகர் சூர்யா மீண்டும் இணைத்துள்ள படம் 'காப்பான்'. சூர்யாவுடன் மோகன் லால், சயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி, பூமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடந்து செந்தில் கணேஷ் மற்றும் ரமணி அம்மாள் பாடிய 'சிறுக்கி' என்ற பாடலும் வெளியானது.

இன்று திருவான்மியூரில் ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொல்கின்றனர். நடிகர் சூர்யா சமீபத்தில் கல்விக்கொள்கையை பற்றி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசன், மு.க.ஸ்டாலின், சீமான், பா.ரஞ்சித் போன்றவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் பா.ஜ.கவினர் அவர் தெரிவித்த விமர்சனங்களை ஏற்க மறுத்தனர். ரஜினிகாந்த் இதுபற்றி ஏதும் கருத்து தெரிவிக்காத நிலையில் தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். மேலும் விழாவில் கார்த்தி, சிவக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். 

ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன் லால் இந்திய பிரதமராகவும் சூர்யா அவரது பாதுகாப்பாளராக நடித்துள்ளனர். மேலும் ஆர்யா பிரதமரின் பையனாகவும் சயீஷா பிரதமரின் செயலாளராகவும் நடித்திருக்கின்றனர். இந்தப்படம் வரும் ஆக்ஸ்ட் மாதம் 30 தேதி ரிலீஸாகிறது. இன்று விழாவில் ரசிகர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. கதவுகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் அலையெனத் திரண்டதால் மண்டபமே பரபரப்பாகக் காட்சியளிக்கப்பட்டது. 

ரஜினிகாந்த், ஷங்கர், மோகன்லால் ஆகியோர் அரங்கத்துக்குள் வந்துவிட்டார்கள். முதலில் டீசர் போடப்பட்டு பின் ஒவ்வொரு பாடலாக ஒளிபரப்பட்டு வருகிறது. விழாவின் படங்கள், வீடியோக்கள் இங்கே...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...