வெளியானது சூர்யாவின் 'காப்பான்' படத்தின் 'சிறுக்கி' பாடல்

சினிமா
Updated Jul 05, 2019 | 18:32 IST | Times Now

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படத்தின் முதல் சிங்கிலான 'சிறுக்கி' பாடல் வெளியாகியுள்ளது.

Kaappaan 'Siriki' Single
'காப்பான்' படத்தின் 'சிறுக்கி' பாடல்   |  Photo Credit: Twitter

'காப்பான்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜூலை 5-ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை 5.00 மணிக்கு 'சிறுக்கி' பாடல் வெளியானது.     

'சிங்கம்-3' படத்திற்கு பிறகு சூர்யாவுடன் 'காப்பான்' படத்தில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கிராமத்து திருவிழா பாடல் போல் அமைந்துள்ள இந்த குத்து பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஞானகரவேல் எழுதியுள்ள இப்பாடலை 'சூப்பர் சிங்கர்' புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ரமணி அம்மாள் பாடியுள்ளனர். வெஸ்டர்ன் பாடல்களுக்கு பேர்போன ஹாரிஸ் ஜெயராஜ் கிராமத்து சாயலில் இப்பாடலுக்கு இசையமைத்து அசத்தியுள்ளார்.     

 

 

'சிறுக்கி சீனிக்கட்டி சிணுங்கி சிங்காரி, அடி குத்தி நிக்கும் முன்னழகு முட்டுது கீறி' என்ற வரிகளில் கிராமத்து மண் வாசம் வீசுகிறது .மேலும் லிரிக் வீடியோவில் இடம்பெறும் புகைப்படங்கள் திருவிழா கோலாகலத்துடன் காட்சி அளிக்கிறது. 'காப்பான்' படத்தின் டீசர் சண்டை,அதிரடி என ஸ்டைலிஷாக இருந்த நிலையில், அதற்கு முற்றிலும் எதிர்மறையாக இந்த 'சிறுக்கி' பாடல் அமைந்துள்ளது.       

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மோகன் லால், சாயீஷா, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சூர்யாவின் 'அயன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எம்.எஸ் பிரபு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது .    

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...