ஜோதிகாவா இது? - செம ஆக்‌ஷன், காமெடி படம் காத்திருக்கு! - ஜாக்பாட் ட்ரைலர்

சினிமா
Updated Jul 23, 2019 | 12:32 IST | Zoom

ஜோதிகா, ரேவதி நடிப்பில் ஆகஸ்ட் 2ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் ஜாக்பாட் படத்தின் ட்ரைலரை வெளியிட்டார் சூர்யா!

Jyotika's Jackpot - Official Trailer is out
Jyotika's Jackpot - Official Trailer is out  |  Photo Credit: YouTube

குலேபகாவலி இயக்குநர் கல்யான் படத்தில் ஜோதிகா நடித்திருக்கும் ஜாக்பாட் படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியானது. சாஃப்ட்டாக வரும் ஜோதிகா இந்தப்படத்தில் விஜயசாந்தியாக மாறி ரணகளம் செய்திருக்கிறார். இவருடன் குலேபகாவலியில் ஸ்மக்லிங் வேடத்தில் நடித்த ரேவதியும் கலக்கியிருக்கிறார் என்பது ட்ரையலைப் பார்த்ததும் தெரிகிறது. இவர்களுடன் ஆனந்த் ராஜ், மொட்ட ராஜேந்திரன், யோகிபாபு என காமெடி நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில் ப்ரேக் எடுத்த ஜோதிகா, குழந்தைகள் பெரியவர்களானதும் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மகளிர் மட்டும், காற்றின் மொழி, ராட்சசி என்று பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களத்தில் நடித்தாலும் அனைத்துமே சாஃப்ட் ரோல்தான். பாலாவின் நாச்சியார் படத்தில் மட்டும் அதிரடி போலீசாக கெத்து காட்டினார். 

ஆனால் இன்று வெளியான ஜாக்பாட் படத்தில் நான் 100 காலா, 500 கமாலி, 1000 பாட்ஷா என பஞ்ச் வசனம் பேசி எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் ஆக்‌ஷன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ரேவதியும் சேர்ந்து அதகளம் செய்துள்ளார். வரும் ஆக்ஸ்ட் 2 தேதி ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். சூர்யா தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரையலரை தனது பிறந்தநாளான இன்று ஜோவின் முதல் அக்‌ஷன் திரைப்படம் என்று கூறி வெளியிட்டுள்ளார் சூர்யா. இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தி, சத்யராஜுடன் ஜூத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவருகிறார் ஜோ. 

 
படத்தின் ட்ரைலர் இங்கே: 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...