நடிகா் கார்த்தி தனது அண்ணி ஜோதிகாவுடன் இணைந்து நடித்துள்ள தம்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் சூர்யா நேற்று வெளியிட்ட நிலையில், இன்று அந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழில் கமல் நடிப்பில் வெளியான 'பாபநாசம்' படத்தை இயக்கிய ஜித்து ஜோசப், நடிகர் கார்த்தியை வைத்து இயக்கியுள்ள படம் 'தம்பி'. தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனா். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் சூரஜ் சதனா இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். 96 படத்திற்கு இசையமத்த கோவிந்த வஸந்தா தம்பி படத்திற்கு இசையமைத்துள்ளாா்.
'தம்பி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகா் சூர்யா நேற்று வெளியிட்ட நிலையில் இன்று டீஸர் வெளியாகியுள்ளது. தமிழில் சூர்யாவும், மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் தம்பி டீஸரை வெளியிட்டனா். இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.