ஜோதிகா, ரேவதி நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 11’ - படப்பிடிப்பு நிறைவு!

சினிமா
Updated Apr 22, 2019 | 16:12 IST | Zoom

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை ரேவதி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

cinema, சினிமா
ஜோதிகா, ரேவதியுடன் படக்குழு மற்றும் சூர்யா  |  Photo Credit: Twitter

சென்னை: தமிழில் ’காற்றின் மொழி’ திரைப்படத்திற்கு பிறகாக ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை ரேவதி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக உருவாகியிருக்கிறதாம். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், நண்டு ஜெகன் உள்ளிட்ட பலரும் ஜோதிகா மற்றும் ரேவதியுடன் இணைந்து நடித்துள்ளனர். 

Jyothika

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டதட்ட 35 நாட்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் கடைசிநாள் படப்பிடிப்பில் நடிகரும், ஜோதிகாவின் கணவரும், தயாரிப்பாளருமான சூர்யா கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். 

விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஆனந்த்குமார் இப்படத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் நம்பர் 11’ என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்திரைப்படத்தை தொடர்ந்து எஸ்.ராஜ், ஜீத்து ஜோசப் ஆகியோரின் படங்களிலும் ஜோதிகா ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
ஜோதிகா, ரேவதி நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 11’ - படப்பிடிப்பு நிறைவு! Description: இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை ரேவதி இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.
Loading...
Loading...
Loading...