நடிகை ஜோதிகாவின் அடுத்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'36 வயதினிலே' படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள நடிகை ஜோதிகா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறாா். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, தற்போது பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்திலும், 'பொன்மகள் வந்தாள்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஆர்.சரவணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகாவுடன் பிரபல நடிகரும், இயக்குனருமான சசிகுமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான 'ஜாக்பாட்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.