"தளபதி 63" டைரக்டர் அட்லி மீது போலீசில் புகார் அளித்த துணை நடிகை!

சினிமா
Updated Apr 23, 2019 | 19:25 IST | Zoom

டைரக்டர் அட்லி மற்றும் அவரது உதவி இயக்கநர்கள் மீது துணை நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Atlee and Vijay, அட்லி, விஜய்
அட்லி, விஜய்  |  Photo Credit: Twitter

படப்பிடிப்பின் போது தன்னைத் தகாத வார்த்தைகளில் பேசியதாக டைரக்டர் அட்லி மீது துணை நடிகை கிருஷ்ணதேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மெர்சல் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து "தளபதி 63" படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.  விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, இந்துஜா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. சென்னை, ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு விஜய் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் அட்லியும், உதவி இயக்குநர்களும் தன்னிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாக துணை நடிகை கிருஷ்ணதேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:  சினிமா துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறேன். ஏப்ரல் மாதம் 16-ம் தேதி, ஈவிபி பிலிம் சிட்டியில் டைரக்டர் அட்லி எடுத்து வரும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. அதில் நான் பணிபுரிந்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது, அட்லியும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகளில் பேசி வேலை செய்ய விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லி மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

NEXT STORY
"தளபதி 63" டைரக்டர் அட்லி மீது போலீசில் புகார் அளித்த துணை நடிகை! Description: டைரக்டர் அட்லி மற்றும் அவரது உதவி இயக்கநர்கள் மீது துணை நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles