ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதிக்கு சென்று வழிபட்ட மகள் ஜான்வி கபூர்!

சினிமா
Updated Aug 13, 2019 | 20:04 IST | Zoom

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள் ஜான்வி கபூர் இன்று திருப்பதிக்கு சென்று வழிபட்டார்.

Actress Sridevi
நடிகை ஸ்ரீதேவி  |  Photo Credit: Twitter

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 56-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் இன்று திருப்பதிக்கு சென்று வழிபட்டார். 

1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார் ஸ்ரீதேவி. தன் 4 வயதிலேயே  'கந்தன் கருணை'  
படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரை பயணத்தை தொடங்கிவிட்டார். அதனை தொடர்ந்து 'துணைவன்', எம்.ஜி.ஆர்-இன் 'நம் நாடு' ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1976-ஆம் ஆண்டு வெளியான 'மூன்று முடுச்சு' படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதனை தொடர்ந்து '16 வயதினிலே','சிகப்பு ரோஜாக்கள்','மூன்றாம் பிறை', 'ஜானி','வறுமையின் நிறம் சிவப்பு' ஆகிய வெற்றி படங்களிலும் நடித்திருந்தார். நடிகை ஸ்ரீதேவி தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் இருந்து ஹிந்தி திரைவுலகிற்கு சென்று தனக்கென தனி முத்திரை பதித்த முதல் நடிகை ஸ்ரீதேவி.

போனி கபூருடனான திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்து கொண்ட ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு வெளியான 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இத்தனை சிறப்பிற்குரிய அவர் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி துபாயில் மரணம் அடைந்தார். அவரது மரணம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.      

 

 

இது மட்டும் இன்றி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

 

 

இவர்கள் மட்டும் இன்றி திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரமுகர்களும் இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை பற்றி பதிவிட்டுள்ளார்.   

NEXT STORY