ஆகஸ்ட் 15-ல் திரைக்கு வருகிறது ஜெயம் ரவியின் 'கோமாளி'

சினிமா
Updated Jul 09, 2019 | 10:43 IST | Zoom

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'கோமாளி' திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Comali
கோமாளி  |  Photo Credit: Twitter

'அடங்கமறு' படத்தை தொடந்து ஜெயம் ரவி நடித்துள்ள 'கோமாளி' திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிவுள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் நேத்தன் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

தொடர்ந்து வித்தியாசமான போஸ்டர்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது 'கோமாளி' திரைப்படம். ஜெயம் ரவி பல தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளதாகவும், பள்ளி மாணவனாக அவர் தோன்றும் காட்சிகளுக்காக 20 கிலோ எடையை குறைந்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'பைசா நோட்' பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.  

 

 

'கோமாளி' படத்தில் இருந்து ஒரு பாடல் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் படத்தின் டீசர் ட்ரெய்லர் இன்னும் வெளியாகவில்லை. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிரிபார்க்கப்படுகிறது. 'கோமாளி' படம் வெளியாகும் ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் பிரபாஸின் 'சாஹோ' திரைப்படமும் வெளியாகவுள்ளது. சுதந்திர தினம் வியாழக்கிழமை வருவதால் வாரயிறுதியை குறிவைத்து பல பெரிய படங்கள் வெளியாகவுள்ளது.

NEXT STORY
ஆகஸ்ட் 15-ல் திரைக்கு வருகிறது ஜெயம் ரவியின் 'கோமாளி' Description: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'கோமாளி' திரைப்படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola