சாக்‌ஷி எவிக்டடாம்! - ஒரு வழியா அழுகாச்சி கதை முடிஞ்சுது

சினிமா
Updated Aug 03, 2019 | 19:13 IST | Zoom

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டார் என்று தகவல்கள் வருகின்றன!

பிக்பாஸ் சாக்‌ஷி
பிக்பாஸ் சாக்‌ஷி  |  Photo Credit: Twitter

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் சாக்ஷி எலிமினேட் ஆனதாக செய்திகள்  வருகிறது. பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் ஐந்தாவது போட்டியாளராக சாக்ஷி வெளியேற்றப் பட்டிருக்கிறார்.

 கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கவின், லாஸ்லியா, சாக்ஷி இந்த மூவருக்கும் இடையேயான ரிலேஷன்ஷிப் பற்றியே பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. இது அவர்களை காயப்படுத்துவது மட்டுமல்லாமல் ஹவுஸ்மெட்களையும் எரிச்சல் அடையச் செய்வதோடு பார்க்கும் நமக்கும் மிகவும் போரடிக்க செய்துவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் சேரன், அபிராமி ரேஷ்மா, கவின், மதுமிதா, சாக்ஷி ஆகிய ஐவரும் நாமினி செய்யப்பட்டார்கள்.

சாக்ஷியைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் கவினுடன் பேசி பிரச்சனை ஏற்படுத்துகிறார் என்று பார்வையாளர்கள் நினைத்து இருக்கலாம். மேலும் இப்போது அவர் இல்லை என்றால் லாஸ்லியாவும் கவினும்  என்ன மாதிரியான ரிலேஷன்ஷிப்பில் தொடர்வார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க, சாக்‌ஷியை சீக்ரெட் ரூமில் தங்க வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வாரம் மற்றொரு போட்டியாளர் யாராவது உள்ளே வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாற்பது நாட்களை கடந்து பிக்பாஸ் மற்ற சீசன் போலல்லாமல் மிகவும் டல்லடித்து வருகிறது. அதற்கு மீரா, வனிதா போன்ற ஹவுஸ்மேட்ஸ்கள் வெளியேறியதும் ஒரு காரணம். இதனால் கண்டிப்பாக யாரையாவது உள்ளே விடுவார் பிக் பாஸ். அது கஸ்தூரி என்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்ப்போம் யார் வருகிரார்கள் என்று!

NEXT STORY
சாக்‌ஷி எவிக்டடாம்! - ஒரு வழியா அழுகாச்சி கதை முடிஞ்சுது Description: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் சாக்‌ஷி அகர்வால் எலிமினேட் செய்யப்பட்டார் என்று தகவல்கள் வருகின்றன!
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola