பிக்பாஸில் 17வது போட்டியாளராக செம்பா நுழைகிறாரா!?

சினிமா
Updated Jul 17, 2019 | 18:31 IST | Zoom

பிக்பாஸில் 17வது போட்டியாளராக செம்பா ஆல்யா நுழைய இருப்பதாகத் தெரியவந்துள்ளது

Semba Alya
Semba Alya  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் தமிழ் சீசன் 3-இல் செம்பா ஆல்யா 17வது போட்டியாளராகக் களமிறங்கவிருக்கிறார் என்று செய்தி வெளிவரத்  தொடங்கியுள்ளது. ஏற்கனவே கவின், சாண்டி என இரு விஜய் டிவி போட்டியாளர்கள் உள்ளே இருக்க 3வதாக ஒரு ஆள் உள்ள நுழையவிருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 3, ஜூன் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 4வது வாரத்தை எட்டியுள்ளது. தொடக்கவிழாவில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் மொத்தம் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள். இன்று 15 போட்டியாளர்கள்தான் உள்ளே செல்கிறார்கள். பிறகு 2 பேர் உள்ளே நுழைவார்கள் என்று கூறியிருந்தார். நிகழ்ச்சி தொடங்கிய 3வது நாளே மீரா மிதுன் 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்துவிட்டார்.

அதன்பிறகு முதல் எலிமினேஷனாக ஃபாத்திமா பாபு வெளியேற, சென்ற வாரம் வனிதா விஜயக்குமார் வெளியேறினார். மிக வலுவான போட்டியாளரான வனிதாவே வெளியேறியதால் அடுத்து வரும் போட்டியாளர் கண்டிப்பாக இன்னும் பெரிய போட்டியாளராகத்தான் இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஒரு பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூட தன்னை பிக்பாஸில் அழைத்தார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்த போட்டியாளர் செம்பாதான் என்று தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 

விஜய் டிவியின் அதிக டி.ஆர்.பி தரும் சீரியல்களில் ராஜா ராணியும் ஒன்று. இந்த சீரியலில் முன்னணி கதாப்பாத்திரத்தில் டான்சர் ஆல்யாவும், சஞ்சீவும் நடித்துவந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து ரியல் ஜோடியாகி விட்டனர். விரைவில் அவர்களுக்குத் திருமணமும் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் சீரியலை விஜய் டிவி திடீரென்று முடித்துவிட்டது. இதனால் ஆல்யா வீட்டுக்குள் செல்லுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பது உறுதியாகிறது. இவர் இப்போதே உள்ளே செல்கிறாரா அல்லது சுஜா வருணி, விஜயலக்‌ஷ்மி போல இறுதி வாரங்களில் செல்வாரா என்பது பிக்பாஸுக்கே வெளிச்சம்!
 

NEXT STORY
பிக்பாஸில் 17வது போட்டியாளராக செம்பா நுழைகிறாரா!? Description: பிக்பாஸில் 17வது போட்டியாளராக செம்பா ஆல்யா நுழைய இருப்பதாகத் தெரியவந்துள்ளது
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola