சின்னத்திரையில் நயன்தாரா! பிக்பாஸா, டான்ஸ் ஷொவா!?

சினிமா
Updated Apr 20, 2019 | 16:53 IST | டைம்ஸ் நவ் தமிழ்

கலர்ஸ் டிவி சின்னத்திரையில் நயன்தாரா என்ட்ரி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

நயன்தாரா
நயன்தாரா  |  Photo Credit: Instagram

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கலர்ஸ் டிவி மூலம் சின்னத்திரைக்கு என்ட்ரி ஆகவிருப்பது அவர்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2005-ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகியும்இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். சமீபத்தில் கலர்ஸ் டிவி சின்னத்திரையில் நயன்தாரா என்ட்ரி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள். அது பிக்பாஸ் 3 யின் தொகுப்பாளர் என்றும் பேச்சு அடிபடுகிறது.

தமிழில் இரண்டு பிக் பாஸ் சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். மூன்றாவது சீசனுக்கு அவர் 100 கோடி கேட்டதாக வதந்திகள் வந்தன. தவிர அவர் அரசியலுக்கு வந்துவிட்டதால் இனி தொகுப்பாளராக இருக்க மாட்டார் எனவும் செய்திகள் வெளியாகின. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு கலர்ஸ் டிவி தான் உரிமம் வைத்துள்ளது. தமிழில் அந்தச் சேனல் இல்லாததால் கடந்த இரண்டு சீசன்களை விஜய் டிவி நடத்தியது. இந்த வருடம் கலர்ஸ் டிவி தமிழில் வந்துவிட்டதால் இனி கலர்ஸ் தமிழ் சேனலில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும் என்று கூறப்பட்டது ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

 இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா சின்னத்திரையில் வருவதாக ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நயன்தாரா இன்றும் நம்பர் ஒன் பிஸி நடிகையாக வலம் வருகிறார் .நடிப்பு மட்டும் இல்லாமல் பலப் படங்களைத் தயாரித்தும் வருகிறார். இவரால்தான் தமிழில் பெண்களுக்கு என்று தனியான கதைகளும் அமைத்து படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படியிருக்கையில் சின்னத்திரைக்கு நயன்தாரா வருகிறார் என்றால் டாக் ஆஃப் தி டவுன் ஆகத்தானே செய்யும்?

ஆனால், அவர் பிக் பாஸ் 3 தான் தொகுத்து வழங்குகிறாரா? என்பதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கவில்லை.  சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது கலர்ஸ் டிவியில் தற்போது முடிந்த டான்ஸ் நிகழ்ச்சியில் எப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பெரிய செலிபிரிட்டி வருவாரோ, அதேபோல அடுத்த சீசனில் தொடக்க நிகழ்ச்சியில் நயன்தாரா வருவார் என்று பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலர்ஸ் டிவியின் இசை நிகழ்க்கியில் நடுவராக இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடன நிகழ்ச்சியிலோ அல்லது பிக் பாஸ் 3 யிலோ எதில் வந்தாலும் சின்னத்திரையில் நயன்தாரா வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்!?

NEXT STORY
சின்னத்திரையில் நயன்தாரா! பிக்பாஸா, டான்ஸ் ஷொவா!? Description: கலர்ஸ் டிவி சின்னத்திரையில் நயன்தாரா என்ட்ரி என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
Loading...
Loading...
Loading...