இந்த வாரம் பிக்பாஸில் இருந்து கஸ்தூரி வெளியேற்றப்பட்டாரா?!

சினிமா
Updated Aug 25, 2019 | 11:52 IST | Zoom

நாமினேஷன் ஆன முதல் வாரத்திலேயே கஸ்தூரி எவிக்ட் செய்யப்பட்டதாக செய்திக பரவத் தொடங்கி உள்ளது.

கஸ்தூரி சங்கர்
Kasturi Shankar  |  Photo Credit: Twitter

பிக் பாஸ் தமிழில் இந்த வாரம் கஸ்தூரி வெளியேற்றப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இவர் இரண்டு வாரத்துக்கு முன்புதான் பிக்பாஸில் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். இந்நிலையில் நாமினேஷன் ஆன முதல் வாரத்திலேயே அவர் வெளியேற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ்  சீசன் 3 கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இன்னும் முப்பது நாட்களே உள்ள நிலையில் 17 போட்டியாளர்கள் இருந்த வீடு தற்போது ஒன்பதாக சுருங்கி உள்ளது. இதில் வனிதா வெளியே சென்றுவிட்டு பின் தற்போது வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்து உள்ளார். கஸ்தூரி இரண்டு வாரத்திற்கு முன்புதான் மற்றொரு வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். தற்போது வீட்டில் லாஸ்லியா, ஷெரின், தர்ஷன், கவின், சாண்டி, முகேன், கஸ்தூரி, வனிதா, சேரன் ஆகியோர் மட்டுமே வீட்டுக்குள் உள்ளன.ர் இந்த வாரம் தர்ஷன், சாண்டி முதன்முறையாக நாமினேஷனுக்குள் வந்தனர். அவர்களோடு கஸ்தூரியும் சேரனும் நோமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.  இவர்களில் சேரன் இந்த வாரம் கேப்டனாக உள்ளார். இதனால் அடுத்த வாரத்திற்கு அவரை நாமினேஷன் செய்யமுடியாது. சென்ற வாரம் அபிராமி வெளியேறிய நிலையில் மதுமிதாவும் பிக்பாஸால் வெளியேற்றப்பட்டார்.

சேரன் பலமுறை நாமினேஷன் வந்தாலும் வெளிய அவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் இருப்பதால் ஒவ்வொரு வாரமும் தப்பித்து கொண்டிருக்கிறார்.  அவரைப் போலவே சாண்டிக்கும் தர்ஷனுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.  எப்படியும் அவர்கள் இருவரும் வெளியேற வாய்ப்பே இல்லை என்று பிக்பாஸ் ரசிகர்கள் கணித்து வைத்திருந்தனர். அப்படி இருக்கும்போது இந்த வாரம் கஸ்தூரி தான் எலிமினேட் ஆனதாக நேற்று ஷூட்டிங் முடிந்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் கமல்ஹாசன் கஸ்தூரியை சீக்ரெட் ரூமுக்கு செல்கிறீர்களா என்று கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வாரம் பெரிதாக சண்டைகள் இல்லாமல் டாஸ்கும் மிகவும் சுலபமாகவே கொடுக்கப்பட்டது. மேலும் ஜெயில் தண்டனையும் தரவில்லை. ஆனால் பிக்பாஸ் இறுதிகட்டத்தை நெருங்கி வருவதால் இனி வரும் வாரங்களில்  தாங்கள் கடுமையாக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்பாக உள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...