அட! தல 60 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகிறாரா ஜான்வி கபூர்?!

சினிமா
Updated Aug 02, 2019 | 19:48 IST | Zoom

தல 60 படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார்

Ajithkumar - Jhanvi Kapoor
Ajithkumar - Jhanvi Kapoor  |  Photo Credit: Twitter

அஜித் நடிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் நிலையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அந்தப் படத்தில் ஸ்ரீதேவி - போனி கபூரின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன. 

அஜித்தின் 60வது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை நேர்கொண்ட பார்வை, தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்கவேட்டை படத்தின் இயக்குநர் ஹச்.வினோத் இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை ஆகஸ்ட் மாத இறுதியில் இருக்கும் என்றும் படபிடிப்பு செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது. 

இந்தப் படம் பற்றி இதற்கு முன்னாள் பேசிய போனி கபூர், நடிப்பு தவிர அஜித் விளையாட்டு, ரேசிங் போன்ற அனைத்து துறையிலும் திறமையானவராக இருக்கிறார் என்பதே தற்போதுதான் எனக்கு தெரிய வந்தது. இந்தப் படம் அவரது மற்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதைக்களத்துடன் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் இந்தப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார் என்றும் திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது. தற்போதைய செய்தி என்னவென்றால் ஸ்ரீதேவி ஆசைபட்டபடி அவரின் மகள் ஜான்வி கபூர் அஜித் படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னால் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் அவருடன் சிறப்புத் தோற்றத்தில் அஜித் நடித்திருந்தார். தனது மகளுடம் அஜித் நடிக்கவேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
அட! தல 60 படத்தில் அஜித்துக்கு ஜோடியாகிறாரா ஜான்வி கபூர்?! Description: தல 60 படத்தின் மூலம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாகிறார்
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola