ஜூலை-11 ஏ.எல்.விஜய்க்குத 2-வது திருமணம்!?

சினிமா
Updated Jun 29, 2019 | 09:57 IST | Zoom

நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

AL Vijay
இயக்குநர் ஏ.எல்.விஜய்  |  Photo Credit: Twitter

 

இயக்குநர் ஏ.எல்.விஜய் வரும் ஜூலை 11-ஆம் தேதி இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அப்போது அமலா பால் நடிப்பதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக காரணம் கூறப்பட்டது. விவாகரத்து செய்து கொண்ட அமலாபால் அதன் பிறகு பல படங்களில் நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவரது ஆடை படத்தின் டீசர் வெளியானது.

ஏ.எல்.விஜய் அஜித்குமார் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பிறகு மதராசப்பட்டினம், தெய்வதிருமகள், விஜய்யை வைத்து தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கும் முயற்சியில் இருந்து வருகிறார்.  இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். அழகப்பனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 விவாகரத்து கிடைத்த பிறகு பலமுறை விஜய்யின் பெற்றோர் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் விஜய் திருமணம் செய்து கொள்ளவில்லை.  சமீபத்தில் கூட சாய் பல்லவிக்கும் இவருக்கும் காதல் என்று வதந்தி பரவியது, இதனை இருவருமே மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஒரு வழியாக அவர் பெற்றோர்களின் விருப்பத்துக்கேற்ப திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஒரு டாக்டரை வரும் ஜூலை 11ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் மணந்துகொள்ளவிருக்கும் அந்தப் பெண் பொது நல மருத்துவராகப் பணிபுரிகிறார் என்றும் அவரும் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும் கூடுதல் தகவல்.

NEXT STORY
ஜூலை-11 ஏ.எல்.விஜய்க்குத 2-வது திருமணம்!? Description: நடிகை அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2017ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
Loading...
Loading...
Loading...