ட்ராப் ஆனதா சிம்புவின் 'மஃப்டி' ரீமேக்? சிம்பு படங்களுக்கு தொடரும் சிக்கல்கள்!

சினிமா
Updated Oct 09, 2019 | 15:24 IST | Zoom

சிம்புவின் தாமதத்தால் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் வேறு படங்களின் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கியதால் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ட்ராப் ஆனதா சிம்புவின் 'மஃப்டி' ரீமேக்?,Actor Simbu's 'Mufti' Remake dropped?
ட்ராப் ஆனதா சிம்புவின் 'மஃப்டி' ரீமேக்?  |  Photo Credit: Twitter

நடிகர் சிம்பு படப்பிடிப்புக்கு வராததால் அவர் மீது படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றி அடைந்த 'மஃப்டி' திரைப்படத்தின் ரீமேக்கை தமிழில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவும் கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். கன்னட படத்தை இயக்கிய நார்தன் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் தொடங்கியது. அதன பின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளுக்கு வராமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார் நடிகர் சிம்பு. பின்னர் சிம்பு எப்போது தேதிகள் கொடுப்பார் என்று படக்குழு காத்திருந்தது.

நடிகர் சிம்பு மீண்டும் சென்னைக்கு வந்ததும் படப்பிடிப்புக்கு வராமல் தாமதம் செய்து கொண்டிருக்கிறார். இதனால் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பெரும் நஷ்டம் அடைந்துள்ளதால் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் இந்த தாமதத்தால் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் வேறு படங்களின் வேலைகளில் கவனம் செலுத்தி வருவதால் இப்படம் கைவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் படங்கள் ட்ராப் ஆவதும் சர்ச்சைகளில் சிக்குவதும் மிகவும் சகஜமான ஒன்று. சில மாதங்களுக்கு முன்பு கூட சிம்பு தாமதிப்பதால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை என்று 'மாநாடு' படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன் பிறகு சிம்புவே ரூ 100 கோடி பட்ஜெட்டில் 'மகாமாநாடு' என்ற படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு அதை பற்றியும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.      

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...