விக்ரம் 58: முதற்கட்ட ஷூட்டிங் முடித்த இர்பான் பதான்

சினிமா
Updated Nov 05, 2019 | 18:38 IST | Zoom

விக்ரம் 58 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ”நல்லபடியா முடிஞ்சாச்சு” என இர்பான் பதான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Irfan Pathan, இர்பான் பதான்
இர்பான் பதான்  |  Photo Credit: Twitter

நடிகர் விக்ரமின் 58-வது படத்தில் நடிக்கும் கிரக்கெட் வீரர் இர்பான் பதான் தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளார். அஜய் ஞானமுத்து இயக்கும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் இர்பான் பதான்.

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் இர்பான் பதான் பதிவிட்டுள்ளார். அதில் “வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. முதல் கட்ட படப்பிடிப்பு நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க ஐம் வெய்டிங்” இவ்வாறு இர்பான் பதான் கூறியுள்ளார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் இர்பான் பதான், துருக்கி நாட்டவராக தோன்றுகிறார். ’டிமாண்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக, கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி திரைத்துரையில் நுழையும் தகவலை ட்விட்டரில் பகிர்ந்தார் இர்பான் பதான்.

 

 

அந்த பதிவில்,  “என் அன்பான புள்ளைங்கோ எல்லாத்துக்கும் வணக்கம், நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி... நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் இணைய ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்களுடைய ஆதரவு தொடரட்டும், நன்றி, மஜா பன்றோம்.” இவ்வாறு இர்பான் பதான் கூறியிருந்தார்.

NEXT STORY