ஆறு கதைகள்...ஒரே திரைப்படம் - சிம்புத்தேவனின் ‘கசட தபற’ டைட்டில் பர்ஸ்ட் லுக்!

சினிமா
Updated May 20, 2019 | 23:03 IST | Zoom

காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்னும் வரலாற்று காமெடி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.

cinema, சினிமா
இயக்குனர் சிம்புத்தேவன்  |  Photo Credit: Twitter

சென்னை: ’இம்சை அரசன்’ திரைப்பட புகழ் இயக்குனர் சிம்புத்தேவன் இயக்கவிருக்கும் ‘கசடதபற’ படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டுள்ளது.

காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்னும் வரலாற்று காமெடி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் ‘புலி’ திரைப்படமும் குழந்தைகளை கவரும் வகையில் வெளிவந்தது. 

இந்நிலையில், இம்சை அரசன் பார்ட் டூ எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் வடிவேலுவுக்கும், சிம்புதேவனுக்கு இடையிலான பிரச்சனையால் அது பாதியில் நின்றது. இந்நிலையில்தான் வெங்கட்பிரபு தயாரிப்பில் அமைதியாக இந்த திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் சிம்பு.

’கசட தபற’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. இது ஒரு ஆன்தாலஜி திரைப்படம். அதாவது ஒரே திரைப்படத்திற்குள் ஆறு கதைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைக்கருவுடனான திரைக்கதையைக் கொண்டது. ஒரே படம்...ஆறு கதைகள். இதன் ஒவ்வொரு படத்தின் தொழில்நுட்பக் குழுக்கள் குறித்த அறிமுகங்களும் ஒவ்வொரு நாளும் படக்குழுவால் அப்டேட் செய்யப்பட உள்ளதாம். மேலும், இந்த திரைப்படத்தில் வெங்கட் பிரபுவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். 

இதற்கிடையே பாதியில் நின்ற இம்சை அரசன் 24ம் புலிகேசியும் விரைவில் துவங்கும் என்று சிம்புத்தேவன் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
ஆறு கதைகள்...ஒரே திரைப்படம் - சிம்புத்தேவனின் ‘கசட தபற’ டைட்டில் பர்ஸ்ட் லுக்! Description: காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்னும் வரலாற்று காமெடி படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles