விஷால் - மிஷ்கின் கூட்டணியில் இணைந்தார் இளையராஜா!

சினிமா
Updated Sep 11, 2019 | 13:44 IST | Zoom

துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்திற்கு அரோள் கரோலி இசையமைத்திருந்தார். மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார்.

Ilaiyaraaja to compose music for Thupparivaalan 2, துப்பரிவாளன் 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா
துப்பரிவாளன் 2 படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா  |  Photo Credit: Twitter

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இசையமைக்க இளையராஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 2017-ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்க இயக்குனர் மிஷ்கின் திட்டமிட்டுள்ளார்.

விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்த துப்பறிவாளன் திரைப்படம், ஆங்கில நாவல்களில் வரும் புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தின் தாக்கத்தில் உருவானதாகும். துப்பறிவாளன் படத்தின் முதல் பாகத்திற்கு அரோள் கரோலி இசையமைத்திருந்தார். முன்னதாக, மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படத்திற்கும் இவர் தான் இசையமைத்தார்.

இந்நிலையில், தற்போது துப்பரிவாளன் 2 படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக, மிஷ்கின் இயக்கிய நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார்.

தனது ட்விட்டர் பதிவில் விஷால் கூறியதாவது: “நான் திரைத்துறையில் 15-வது ஆண்டிற்குள் நுழையும் இந்த அற்புதமான தினத்தன்று, துப்பறிவாளன் 2 திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா அவர்கள் ஒப்பந்தம் ஆகியுள்ளதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

 

முதல்முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா என் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் எனது திரைவாழ்க்கை முழுமையடைகிறது,” என்றார்.

NEXT STORY