இசை நிகழ்ச்சி நடந்த மேடையிலே கோபப்பட்ட இளையராஜா - வைரல் வீடியோ

சினிமா
Updated Jun 03, 2019 | 14:13 IST | Zoom

'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இளையராஜா கோபப்பட்டு பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

 Ilaiyaraaja gets angry with a security personnel on stage
இசையமைப்பாளர் இளையராஜா  |  Photo Credit: Twitter

இசை நிகழ்ச்சி  மேடையில் இளையராஜா கோபப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் யூ-டியூப் சேனலுக்கு இளையராஜா அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையானது. அதில், ஒரு பீரியட் படம் எடுக்கிறார்கள் என்றால், அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு பாடலையே இசைக்க வேண்டும். அந்தக் காலத்தில் வந்த மற்றொரு இசையமைப்பாளரின் பாடலை பயன்படுத்துவது அவசியமற்றது. இது அவர்களிடம் ஸ்டஃப் இல்லை என்பதை காட்டுகிறது. இது ஒரு வீக்னஸ். ஆண்மையில்லாத்தனமாக இருக்கிறது என மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில் இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடந்த இசை நிகழ்ச்சியிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது செக்யூரிட்டி ஒருவர் மேடைக்கு வந்தார். அதைப்பார்த்த இளையராஜா கோபம் அடைந்தார். நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போது இப்படி வந்து இடையூறு செய்யலாமா ? என்று ஆங்கிலத்தில் கேட்டார் இளையராஜா. அதற்கு அந்த செக்யூரிட்டி தாகமாக இருக்கிறது என்றார்கள், அதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன் என்று பரிதாபமாக பதில் அளித்தார். அவரது விளக்கத்தை இளையராஜா ஏற்காததால், அந்த செக்யூரிட்டி இளையராஜா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இதையடுத்து பேசிய இளையராஜா, "ரூ. 500, ரூ. 1000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அவர்களுக்கான இருக்கையில் உட்காராமல் ரூ. 10,000 கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் இருக்கையில் வந்து உட்காருவது சரியா" என்று கேட்டார். இசை நிகழ்ச்சி  மேடையில் இளையராஜா கோபப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

NEXT STORY