நல்லது நடக்கும் என நானும் நம்புகிறேன்- நடிகர் விஜய் சேதுபதி பேட்டி

சினிமா
Updated Apr 18, 2019 | 14:46 IST | Zoom

மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் நல்லது நடக்கும் என நம்புவதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

Actor vijay sethupathi, நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி  |  Photo Credit: Twitter

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் உற்சாகமாக காணப்படுகின்றனர். 

திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி கூறுகையில், " முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு எனது வாழ்த்துகள். இது உங்களுக்கு மிகப்பெரிய பெருமைக்குரிய விஷயம். ஏனேன்றால் 18 வயதில் நம் வீட்டில் எதாவது முடிவெடுக்கவே நம்பள கேட்பாங்களா என்பது தெரியாது. ஆனால், இந்த நாட்டை நம்மை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கிற பொறுப்பை உங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். நானும் ஓட்டு போட்டு விட்டேன். நல்லது நடக்கும் என நம்புகிறேன். வாக்குபதிவு இயந்திரம் குறித்த பல்வேறு கருத்துகள் சர்சைகள் வாட்ஸ்அப்பில் வருகிறது. அதை நானும் பார்க்கிறேன். அதற்கு என்ன தீர்வு  என எனக்கு தெரியவில்லை. சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் பேச ஆரம்பித்துள்ளனர். மக்களிடம் அரசியல் பற்றிய அறிவு அதிகமாக உள்ளது. மக்களின் விழிப்புணர்வை பாராட்டுகிறேன்". என்றார் விஜய் சேதுபதி. 
 

NEXT STORY
நல்லது நடக்கும் என நானும் நம்புகிறேன்- நடிகர் விஜய் சேதுபதி பேட்டி Description: மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பின்னர் நல்லது நடக்கும் என நம்புவதாக நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
Loading...
Loading...
Loading...