தமிழ் திரையுலகில் கால் பதிக்கும் ஹர்பஜன் சிங்; சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் இணைகிறார்!

சினிமா
Updated Oct 14, 2019 | 18:39 IST | Zoom

”தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில்.” - ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட்

Harbhajan Singh, ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்  |  Photo Credit: Twitter

சென்னை: சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ திரைப்படத்தில் ஹர்பஜன் சிங் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கும் திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் சந்தானம் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடிக்க உள்ளார். குடும்பங்கள் ரசிக்கும் வகையில் தயாராகி வரும் டிக்கிலோனா திரைப்படம் 2020 ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்டம்பர் 5-ஆம் தேதி படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இன்று மாலை 5 மணிக்கு மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக டிக்கிலோனா படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இத்தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் #Dikkiloona ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக தொடங்கியது.

இதுகுறித்து ட்விட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் கூறியதாவது: “என்னை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்யும் கேஜேஆர் ஸ்டூடியோஸ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி, சந்தானம் உள்ளிட்ட டிக்கிலோனா குழுவுக்கு நன்றி. தலைவர், தல, தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்.” இவ்வாறு தனது ட்விட்டர் பதிவில் ஹர்பஜன் சிங் கூறினார்.

 

 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட தொடங்கியது முதல் தமிழில் ட்வீட் செய்து வந்து தமிழர்களின் மனதை கவர்ந்தவர் ஹர்பஜன் சிங். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் ’பேச்சலர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹர்பஜன் சிங் வெளியிட்டார். இந்நிலையில், தற்போது அவரே தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

NEXT STORY