ஆக்‌ஷன் மோடில் ஜி.வி. பிரகாஷ்; வெளியானது 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர்!

சினிமா
Updated Aug 14, 2019 | 14:06 IST | Zoom

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

'Ayngaran' Trailer
'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர்  |  Photo Credit: YouTube

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

2015-ஆம் ஆண்டு வெளியான 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவிஅரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'ஐங்கரன்'. இப்படத்தில் மஹிமா நம்பியார் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு அவரே இசையமைப்பது வழக்கம். அதே போல இப்படத்திற்கும் அவரே இசையமைத்துள்ளார். காமன் மேன் ப்ரெசென்ட்ஸ் நிறுவனம் சார்பில் கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகியுள்ளது.

 

 

இந்த ட்ரெய்லரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இளம் விஞ்ஞானியாக நடித்துள்ளார். மேலும் அவர்களுக்கு இந்த சமுகத்தில் இருக்கும் பிரச்சனைகளையும், அவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கப்படாததையும் ஜனரஞ்சகமாக பதிவிட்டுள்ளது 'ஐங்கரன்' படம்.

 

 

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் தனுஷின் 'அசுரன்' மற்றும் சூர்யாவின் 'சூரரை போற்று' படத்திற்கும் இசையமைத்து வருகிறார். இறுதியாக அவர் நடிப்பில் வெளியான 'வாட்ச்மேன்' படத்தை தொடர்ந்து தற்போது 'ஐங்கரன்','100% காதல்' ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. 

NEXT STORY
ஆக்‌ஷன் மோடில் ஜி.வி. பிரகாஷ்; வெளியானது 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர்! Description: நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமாரின் 'ஐங்கரன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...