கெளதம் கார்த்திக்கின் "தேவராட்டம்" ட்ரைலர் வெளியீடு

சினிமா
Updated Apr 22, 2019 | 16:05 IST | Zoom

முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Devarattam trailer out, தேவராட்டம் ட்ரைலர் வெளியீடு
"தேவராட்டம்" ட்ரைலர் வெளியீடு 

குட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை தொடர்ந்து  முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் "தேவராட்டம்".  நடிகர் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். காமெடி ரோலில் சூரி நடித்துள்ளார்.

இந்தப் படத்தை கே.இ. ஞானவேல்ராஜவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவேஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.  அக்கா - தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டு மதுரை சாயலில் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் முத்தையா கூறியிருந்தார். இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலரை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் இன்று வெளியிட்டுள்ளது.

ட்ரைலரில், "ஏன் பொறந்தோம் வளந்தோம்னு இருக்கக் கூடாது.. பொறந்தமா நல்லதுக்காக நாலு வேற பொழந்தமான்னு இருக்கனும்.. மண்ண தொட்டவனை கூட விட்டரலாம் பொண்ண தொட்டவன விடவே விடக்கூடாது" என வசனம் அனல் பறக்கிறது.

தேவராட்டம் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

NEXT STORY
கெளதம் கார்த்திக்கின் "தேவராட்டம்" ட்ரைலர் வெளியீடு Description: முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Loading...
Loading...
Loading...