தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர்!

சினிமா
Updated Sep 03, 2019 | 08:15 IST | Zoom

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து பணியாற்றும் படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷ்-கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, GOT Actor James Cosmo in Dhanush-Karthik Subbaraj Film
தனுஷ்-கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ  |  Photo Credit: Twitter

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து பணியாற்றும் படத்தில் 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.   

'பேட்ட' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் தனுஷை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். 

 

 

ஜேம்ஸ் காஸ்மோ ஹோலிவுட்டில் 'டிராய்', 'ப்ரேவ் ஹார்ட்', 'வொண்டர் உமன்' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் புகழ் பெற்ற 'கேம் ஆப் த்ரோன்ஸ்' சீரிஸில் ஜோர் மோர்மோன்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'செர்னோபில்' சீரிஸிலும் இவர் நடித்துள்ளார். தனுஷ்-கார்த்திக் சுப்பாராஜ் படத்தில் இவரது கதாபத்திரத்திற்கு முதலில் 'காட்ஃபாதர்' படத்தில் நடித்த அல் பச்சினோ, ராபர்ட் டி நீரோ ஆகியோர்களை நடிக்கவைக்க முயற்சிகள் செய்யப்பட்டது. அவை தோல்வி அடைந்த நிலையில் தற்போது ஜேம்ஸ் காஸ்மோ இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கேங்க்ஸ்டர் திரில்லரான இப்படம் பெரும்பாலம் யூனைடட் கிங்டமில் படமாக்கப்பட உள்ளது. முதற்கட்ட பணிகள் முடிந்த நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. மேலும் இப்படம் நடிகர் தனுஷின் 40-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...