ஷாருக் கான், சிவகார்த்திகேயன் முதல் சமந்தா, காஜல் வரை... பிகில் ட்ரைலரைப் புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!

சினிமா
Updated Oct 14, 2019 | 11:41 IST | Zoom

பிகில் ட்ரைலரைப் பார்த்துவிட்டு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

vijay - shahrukh khan
vijay - shahrukh khan   |  Photo Credit: Twitter

அட்லி இயக்கத்தில், தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சனிக்கிழமை வெளியாகும் என்று அறிவிப்பு வந்ததில் இருந்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. ட்ரைலர் வெளியானதும் பட்டிதொட்டி எங்கும் ஹிட். ட்ரைலரையே பல திரையரங்குகள் பட ரிலீஸ்போல கொண்டாடினர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்வையிட்டனர். வெளியான 48 மணிநேரத்தில் 2 கோடி பேர் ட்ரைலரைப் பார்த்துள்ளதாக சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் கூறியுள்ளது. தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் நடிகர்களும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். அவற்றின் தொகுப்பு இங்கே...

 

 

NEXT STORY