கடாரம் கொண்டான் முதல் லயன் கிங் வரை... இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

சினிமா
Updated Jul 17, 2019 | 12:03 IST | Zoom

இந்த வாரம் வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் தொகுப்பு இங்கே

Movies Releasing this week
இந்த வார ரிலீஸ்கள்  |  Photo Credit: Twitter

இந்த வாரம் தமிழில் 3 படங்களும், டிஸ்னியின் 'தி லயன் கிங்' படமும் வெளியாகிறது. இது மட்டும் இன்றி தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் ' ஐ ஸ்மார்ட் ஷங்கர்' படமும் இந்த வாரம் திரைக்கு வருகிறது.

கடாரம் கொண்டான்:

'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படம் 'கடாரம் கொண்டான்'. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷரா ஹாசன், அபி ஹாசன், லேனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலெர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த வாரம் ஜூலை 19-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.        

 

     

 

ஆடை:

2017-ஆம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்ன குமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் 'காமினி' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஆடை'. பிரதீப் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரம்யா சுப்ரமண்யம், விவேக் பிரசன்னா, ஆதிராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் ட்ரெய்லர் வரை அனைத்தும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில். இந்த வாரம் ஜூலை19-ஆம் தேதி வெளியாகுகிறது.    

 

  

 

உணர்வு:

புதுமுக இயக்குனர் சுப்பு இயக்கும் இப்படத்தில் சுமன், அன்கிதா நவ்யா, அருள் ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இந்த வாரம் ஜூலை 19-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

 

 

தி லயன் கிங்:

டிஸ்னி ஸ்டுடியோஸின்  'தி லயன் கிங்' திரைப்படத்தை 'ஐயன் மேன்', 'ஜுங்கில் புக்' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ஜான் ஃபேவ்ரா இயக்கியுள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி. தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகுகிறது. 'தி லயன் கிங்' திரைப்படத்தின் தமிழ் டப்பிங்கில் சித்தார்த், அரவிந்த் சுவாமி, ரவிசங்கர், ரோகினி, ஐஸ்வர்யா ராஜேஷ், சிங்கம்புலி, ரோபோ ஷங்கர், மனோபாலா ஆகியோர் டப்  செய்துள்ளனர்.      

 

 

 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...