தனுஷ், அபிஷேக் பச்சன் முதல் அனிருத், வரலக்‌ஷ்மி வரை... சிஎஸ்கே தோல்விக்குப் பின் என்ன கூறினார்கள் தெரியுமா?

சினிமா
Updated May 13, 2019 | 12:25 IST | டைம்ஸ் நவ் தமிழ்

நேற்று ரசிகர்களுடன் ரசிகர்களாக போட்டியை ரசித்த பிரபலங்களும் இவற்றைப் பற்றிப் பேசாமல் இல்லை.

celebs reaction for csk lost the ipl final 2019
celebs reaction for csk lost the ipl final 2019  |  Photo Credit: Twitter

ஐபிஎல் 2019ம் ஆண்டு லீக் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்து மும்பை இண்டியன்ஸ் நான்காவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. சென்னைக்கு வெற்றி பிராகாசமாக இருந்த நிலையில், கடைசி ஓவரில் ஒரு பாலுக்கு இரண்டு ரன்கள் இருக்கையில் விக்கெட்டை இழந்து தோல்வி அடைந்தது. 

13வது ஓவர் முடிவில் தோனி இரண்டு ரன்கள் அடித்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. அதுவும் மில்லி மீட்டர் இஞ்சில், ரிவ்யூ மேல் ரிவ்யூ பார்த்து கடைசியில் அவுட் தான் கொடுத்தார்கள் அம்பயர்கள். இதற்கு பலர் அவுட் இல்லை என புலம்பி வந்தனர். மேலும் நேற்று  வர்ணனையாளாராக இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை அணியை அடிக்கடி சீண்டியது ரசிகர்களை மேலும் டென்ஷனுக்குள்ளாக்கியது.

நேற்று ரசிகர்களுடன் ரசிகர்களாக போட்டியை ரசித்த பிரபலங்களும் இவற்றைப் பற்றிப் பேசாமல் இல்லை. தனுஷ், அனிருத், கார்த்திக் சுப்பாராஜ், வெங்கட் பிரபு, வரலக்‌ஷ்மி சரத்குமார் போன்ற பிரபலங்கள் மேட்சுக்குப் பிறகு பதிவிட்ட ட்வீட்கள் இங்கே...

 

எப்போதும் ஹர்பஜன் சிங் போட்டி முடிந்து ட்வீட் போடுவது வழக்கம், நேற்று இறுதிப்போட்டி என்பதால் உணர்ச்சிபொங்கவே ட்வீட் செய்திருந்தார். 

சென்னை சந்தித்த 10 ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. தோல்விக்குப் பின் தோனி சென்னை அணி பற்றி பேசினார். கேப்டன் தோனியின் பேட்டியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள். 

NEXT STORY
தனுஷ், அபிஷேக் பச்சன் முதல் அனிருத், வரலக்‌ஷ்மி வரை... சிஎஸ்கே தோல்விக்குப் பின் என்ன கூறினார்கள் தெரியுமா? Description: நேற்று ரசிகர்களுடன் ரசிகர்களாக போட்டியை ரசித்த பிரபலங்களும் இவற்றைப் பற்றிப் பேசாமல் இல்லை.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles