தீ குரலில் உமா தேவி எழுத்தில் வெளியானது நேர்கொண்ட பார்வையின் வானின் இருள் பாடல்!

சினிமா
Updated Jun 27, 2019 | 08:18 IST | Zoom

நேர்கொண்ட பார்வையின் முதல் சிங்கிள் ட்ராக்கான வானில் இருள் பாடலை உமா தேவி எழுதி இருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி இருக்கிறார்.

vaanin irul
வானின் இருள்  |  Photo Credit: YouTube

அஜித்தின் நேர்கொண்ட பார்வையின் முதல் சிங்கிள் ட்ராக்கான வானில் இருள் பாடல் சற்று முன் வெளியானது. 

இந்தியில் வெளியாகி ஹிட் அடித்தப்படம் பிங்க். இதில் பாலியல் சீண்டலுக்கு ஆளான மூன்று பெண்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரத்தில் தல அஜித் நடித்து தமிழில் ரீமேக் செய்யப்படும் படம் நேர்கொண்ட பார்வை. இந்தப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கனேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று இயக்குநர் ஹச்.வினோத் இயக்குகிறார். 

வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சென்ற மார்ச் மாதம் ரிலீஸானது. படத்தின் ட்ரைலர் இந்த மாதம் 12-ஆம் தேதி ரிலீஸானது. படத்தின் அறிவிப்புகள் எந்தவிதமான முன்னறிவிப்போ, ஆடம்பரமோ இல்லாமல் சர்ப்ரைஸாகத்தான் ரிலீஸாகி வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் சிங்கிள் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இன்று காலை 8.00 மணிக்கு வானில் இருள் என்ற பாடல் ரிலீஸானது. இந்தப்பாடலை உமா தேவி எழுதி இருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி இருக்கிறார். இருவருமே சந்தோஷ் நாராயணனின் இசையில் பெரும்பாலான பாடல்களைப் பதிவுசெய்திருப்பதால், இந்தப்பாடலும் ஒரு நிமிடம் சந்தோஷ் நாராயணன் இசையா என யோசிக்க வைக்கிறது. பாடலின் லிங்க் இங்கே...

 

NEXT STORY
தீ குரலில் உமா தேவி எழுத்தில் வெளியானது நேர்கொண்ட பார்வையின் வானின் இருள் பாடல்! Description: நேர்கொண்ட பார்வையின் முதல் சிங்கிள் ட்ராக்கான வானில் இருள் பாடலை உமா தேவி எழுதி இருக்கிறார். சந்தோஷ் நாராயணனின் மகள் தீ பாடி இருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles