ஃபாத்திமா பாபு வெளியேற்றம் குறித்து, பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தி

சினிமா
Updated Jul 08, 2019 | 14:01 IST

வீட்டுக்குள் முதலாவது போட்டியாளராக சென்ற ஃபாத்திமா பாபு, முதலாவதாக வீட்டை விட்டும்  வெளியேற்றப்பட்டுள்ளார்.

Fathima Babu
ஃபாத்திமா பாபு  |  Photo Credit: Twitter

பிக்பாஸ் சீசன் 3 ஜூன் 23-ஆம் தேதி தொடங்கி தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து முதலாவதாக வெளியேற்றப்பட்டார் ஃபாத்திமா பாபு.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், இரண்டாவது வாரம் பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷன் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. திங்கள் அன்று நாமினேஷன் நடைபெற்ற நிலையில் கவின், மதுமிதா, சரவணன், சாக்‌ஷி அகர்வால், சேரன், ஃபாத்திமா பாபு, மீரா மிதுன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள். ரசிகர்களின் வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் நடைப்பெறுவதால் அதிக வாக்குகளை பெற்ற மதுமிதா முதலில் காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சியில் இரண்டாவதாக அதிக வாக்குகளை பெற்ற பிக்பாஸ் வீட்டின் காதல் மன்னன் கவின் மக்களால் காப்பாற்றப்பட்டார். அடுத்தபடியாக மீரா மிதுன், சரவணன், சேரன், சாக்‌ஷி ஆகியோர் அடுத்தடுத்து காப்பாற்றப்பட்ட நிலையில் ஃபாத்திமா பாபு மட்டுமே எஞ்சியிருந்தார். அவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் என்று அறிந்துகொண்ட பிறகு கமல் எவிக்‌ஷன் கார்டை காட்டினார்.

ரசிகர்கள் மத்தியிலும் பிக்பாஸ் வீட்டிலும் ஃபாத்திமா பாபுவுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. பிக்பாஸ் வீட்டுக்குள் முதலாவது போட்டியாளராக சென்ற ஃபாத்திமா பாபு, முதலாவதாக வீட்டை விட்டும்  வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

சென்ற வாரம் வீட்டில் நடந்த சம்பவங்களால் சாக்‌ஷி அகர்வால் தான் இந்த வாரம் வெளியேற்ற படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று ஃபாத்திமா பாபு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். ரசிகர்கள் பலர் இதனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நேற்று வீட்டை விட்டு வெளியேறிய பாத்திமா பாபு இது தன் வாழ்வில் புதுமையான அனுபவம் என்று தெரிவித்தார். மேலும் வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் அவர் நேற்று நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்தார். 

NEXT STORY
ஃபாத்திமா பாபு வெளியேற்றம் குறித்து, பிக்பாஸ் ரசிகர்கள் அதிருப்தி Description: வீட்டுக்குள் முதலாவது போட்டியாளராக சென்ற ஃபாத்திமா பாபு, முதலாவதாக வீட்டை விட்டும்  வெளியேற்றப்பட்டுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola