பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தா: உற்சாகத்தில் ஹவுஸ்மேட்ஸ்!     

சினிமா
Updated Sep 27, 2019 | 17:39 IST | Zoom

பிக்பாஸ் சீசன் 2-வின் ரன்னர்-அப் ஐஸ்வர்யா தத்தா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தினராக சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தா,Ex-BiggBoss Contestant Aishwarya Dutta enters BiggBoss house
பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா தத்தா  |  Photo Credit: Twitter

சென்ற பிக்பாஸ் சீசன் 2-வின் போட்டியாளர்கள் விருந்தினர்களாக வீட்டுக்குள் சென்றுவரும் நிலையில் இன்று ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.

பிக்பாஸ் வீட்டுக்குள் யாஷிகா, மஹத், ரித்விகா, ஜனனி ஐயர் என சென்ற சீசன் போட்டியாளர்கள் தங்களது படத்தின் ப்ரோமோஷனுக்காக வீட்டுக்குள் வந்துசென்றுள்ளனர். அந்த வகையில் தற்போது சென்ற சீசனின் ரன்னர்-அப் ஐஸ்வர்யா தத்தா இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார். மய்யா மய்யா பாடலுடன் அவர் மெயின் டோர் வழியாக என்ட்ரி கொடுக்க சாண்டி, லெஸ்லியா என ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அவருடன் உற்சாகமாக நடனமாடினார். நடிகர் ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ள 'அலேகா' படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிக்பாஸ் வீட்டில் அவர் ரிலீஸ் செய்துள்ளார்.

 

 

பின்னர் அடுத்ததாக வெளியான ப்ரோமோவில் ஹவுஸ்மாட்ஸுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கையில் பாக்சிங் கையுறைகளை அணிந்துகொண்டு கண்ணாடி பெட்டியில் உள்ள தெர்மாக்கோல் பந்துகளை கொடுக்கப்பட்ட பௌலில் போட வேண்டும். 

 

 

இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் சீசன் 3 முடிவடையவுள்ளது. வீட்டில் உள்ள 5 பேர் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகிறது. முகேன் ராவ் கோல்டன் டிக்கெட் பெற்று நேரடியாக பைனல்ஸுக்கு சென்றுவிட்டார். அடுத்த வாரம் பைனல்ஸுக்கு யாரெல்லாம் சொல்லப்போகிறார்கள் என்பது வார இறுதியில் தான் தெரியவரும்.     


                          


 

NEXT STORY