தேசிய திரைப்பட விருது: கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? - இயக்குநர் வசந்தபாலன் ஆதங்கம்

சினிமா
Updated Aug 13, 2019 | 19:52 IST | Zoom

தேசிய திரைப்பட விருது வழங்குவதில் கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா?

Director Vasantha Balan
Director Vasantha Balan  |  Photo Credit: Facebook

சென்னை: தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் வசந்த பாலன் கருத்து தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக விருதுகள் அறிவிப்பு வெளியாகும் போது தேர்வு குழு மீது பலதரப்பட்ட விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. அதற்கு, தேர்வு குழுவில் அரசியல் தலையீடு இருப்பதாக திரைப்பிரபலங்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

தமிழ் சினிமாவை பொறுத்தவரை மக்களால் கொண்டாடப்பட்ட பல தரமான படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்த போதும் 'பாரம்' என்ற திரைப்படத்துக்கு மட்டும் சிறந்த தமிழ் மொழிப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திட்டமிட்டு தமிழ் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தேசிய விருது தேர்வுகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளாா். இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல,திறமையான,தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா ? பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி , சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார்.

யுவனின் இசை,தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள் ? கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை. கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன ? இந்த நிலை மாறவேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

NEXT STORY
தேசிய திரைப்பட விருது: கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? - இயக்குநர் வசந்தபாலன் ஆதங்கம் Description: தேசிய திரைப்பட விருது வழங்குவதில் கண்துடைப்பாக நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா?
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola