ஃபர்ஸ்ட்லுக் எனக்குத் தெரியாமல் வெளியிட்டார்கள் - காஞ்சனா ரீமேக்கில் இருந்து லாரன்ஸ் விலகல்!

சினிமா
Updated Jun 01, 2019 | 22:23 IST | Zoom

பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த காஞ்சனா ஹிந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் இயக்குநர் லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

காஞ்சனா ரீமேக்கில் இருந்து லாரன்ஸ் விலகல்!
காஞ்சனா ரீமேக்கில் இருந்து லாரன்ஸ் விலகல்!  |  Photo Credit: Twitter

கடந்த 2011-ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், சரத்குமார் நடிப்பில் வெளியாகி சக்கப்போடு போட்டத் திரைப்படம் காஞ்சனா. அதன் பிறகு தற்போது வரை மூன்று பாகங்கள் வெளிவந்து அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. கடந்த மாதம் வெளியான மூன்றாவது பாகம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

அந்தப்படத்தை நடித்து இயக்கிய ராகவா லாரன்ஸே  பாலிவுட்டிலும் காஞ்சனாவை இயக்கவிருப்பதாகக் கூறி ஏப்ரல் மாத இறுதியில் பூஜை போடப்பட்டது. இதில் லக்‌ஷ்மி ராய் நடித்த கதாப்பாத்திரத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ், தோனி பயோபிக்கில் நடித்த கியார அத்வானி நடிக்கிறார். ராகவா லாரன்ஸ் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சர்ப்ரைஸாக திருநங்கையாக நடித்த சரத்குமார் வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அபிதாப் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் அமிதாப் நடிப்பது பற்றி இதுவரைப் படக்குழு உறுதியாகக் கூறவில்லை. இந்தப்படத்துக்கு லக்‌ஷ்மி பாம் என்று தலைப்பிட்டிருந்தார்கள். நேற்று மதியம் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லிக் வெளியானது.

இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப்படத்தில் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கிலிருந்து விலகுவதாக லாரன்ஸ் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

 

 

இந்தப் பதிவில் '' மதியார் வாசல் மிதியாதே என்று கூறுவார்கள். இந்த உலகத்தில் பணம் புகழை விட சுயமரியாதை தான் மிகவும் முக்கியம். அதனால் காஞ்சனா இந்தி ரீமேக்கில் இருந்து நான் விலகுவதாக முடிவு செய்து இருக்கிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது அதனை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை .ஆனால் முக்கிய காரணம் எனக்கு தெரியாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். என்னிடம் கேட்க்காமல், எனக்குத் தெரியாமல் ஏன் என்னிடம் கலந்தாலோசிக்காமல் வெளியிட்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனாக எனக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக்கிலும் திருப்தி இல்லை. நான் மிகவும் அவமரியாதைச் செய்யப்பட்டதாக உணர்கிறேன். என்னால் எனது கதையை திரும்பப் பெற முடியும், நான் இதுவரை எந்தவிதமான ஒப்பந்தத்திலும் கையெழுத்துப் போடவில்லை. ஆனால் அது நன்றாக இருக்காது. எனக்கு அக்‌ஷய் குமார் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. அதனால் அவரைச் சந்தித்து கதையை மட்டும் கொடுக்கப்போகிறேன். இந்தப்படம் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்’’ என்று கூறியிருக்கிறார்.

 

NEXT STORY
ஃபர்ஸ்ட்லுக் எனக்குத் தெரியாமல் வெளியிட்டார்கள் - காஞ்சனா ரீமேக்கில் இருந்து லாரன்ஸ் விலகல்! Description: பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த காஞ்சனா ஹிந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இந்நிலையில் இயக்குநர் லாரன்ஸ் படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles