வீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு?

சினிமா
Updated Jun 17, 2019 | 18:02 IST | Zoom

இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை குறித்து தகவல் வெளியாகி உள்ளன.

Director Mani Rathnam
இயக்குநர் மணிரத்னம்  |  Photo Credit: Twitter

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இன்று காலை சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியான தகவல் படி வழக்கமான உடல்பரிசோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனை சார்பில் அவர் வழக்கமான பரிசோதனைக்கு தான் வந்தார் எனவும், அவர் உடல் நலம் நன்றாக உள்ளது எனவும் கூறினர். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க படவில்லை எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இயக்குனர் மணிரத்னம் இதற்கு முன்னதாக மாரடைப்பு காரணமாக 2004- ஆம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின்பு 2015 இல் இருதய பிரச்சனையால் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.  தமிழ் திரையுலகில் ‘மௌனராகம்’, ‘தளபதி’, ‘அலைபாயுதே’, ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அஞ்சலி’, ‘அக்னி நட்சத்திரம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘நாயகன்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் மணிரத்னம். இறுதியாக அவர் இயக்கத்தில் வெளியான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் ரசிகர்கள் இடையேயும், வியாபார ரீதியாகவும்  நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் அதற்காக நடிகர், நடிகைகளின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY
வீடு திரும்பினார் மணிரத்னம், என்ன பிரச்னை அவருக்கு? Description: இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திகளை குறித்து தகவல் வெளியாகி உள்ளன.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola
Recommended Articles