கலைஞர்கள் பொது வெளியில் கருத்துக்களை பேசக்கூடாதா? - இயக்குநர் பாரதிராஜா

சினிமா
Updated Oct 08, 2019 | 12:24 IST | சு.கார்த்திகேயன்

கலைஞர்கள் தங்கள் கருத்துக்களை திரைப்படத்தை தவிர பொதுவெளியில் பேசக்கூடாது என அச்சுறுத்துவதா? என்று இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளாா்.

Director Bharathiraja condemns sedition case against Mani Ratnam
Director Bharathiraja, இயக்குநர் பாரதிராஜா  |  Photo Credit: Twitter

மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேச விரோத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் "இயக்குனர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சிப்பதாலே ஒருவரை "தேசவிரோதி", "நகர்புற நக்சல்" என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையை தானே குறிப்பிட்டுருந்தார்கள். இதற்காக தேசவிரோத வழக்குப்பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள் மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

bharathiraja statement

கலைஞர்கள் தங்கள் கருத்துக்குளை திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்ய வேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும், பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கதக்கதல்ல. ஆகவே மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசதுரோக வழக்கினை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...