நடிகர் சங்க தேர்தல்.. நாசரை எதிர்த்து களமிறங்கிய இயக்குநர் பாக்யராஜ்

சினிமா
Updated Jun 08, 2019 | 13:05 IST | Zoom

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் வேட்பாளாராக களமிறங்குகிறார்.

 Director Bhagyaraj to contest in nadigar sangam election
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் அணியினர்  |  Photo Credit: Twitter

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட இருக்கும் இயக்குநர் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையிலான அணியினரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2019- 2022 ஆம் ஆண்டிற்கான தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் 23-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்துகிறார். இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ம் தேதியாகும். மனுக்களை திரும்ப பெற 14-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியில் வெளியிடப்படும். 

இந்தத் தேர்தலில் "பாண்டவர் அணி" நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்டோரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் அணியினர் களமிறங்கியுள்ளனர்.  தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். துணைத் தலைவர் பதவிக்கு நடிகர் உதயா, நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகனை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். 

செயற்குழு உறுப்பினர்களாக பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம், ரஞ்சனி, சிவகாமி, சங்கீதா, கே.ராஜன், பாண்டியராஜன்,  நடிகர்கள் சின்னி ஜெயந்த், ரமேஷ் கண்ணா, ஷ்யாம், விமல், நிதின் சத்யா மற்றும் பரத் உள்ளிட்ட 24 பேர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். 

விஷால் அணியில் செயற்குழு உறுப்பினர்களாக குஷ்பு, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா போஸ், குட்டி பத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரதனப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய் ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

NEXT STORY